English (United Kingdom)Sinhala (Sri Lanka)

நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு எம்மை பற்றி மீள்பார்வை

மீள்பார்வை

எமது நோக்கு

நாட்டுக்கு தரமான உயர் சேவையை வழங்குவதற்காக அரசதுறையின் நிறுவனங்கள் வசம் பாதுகாப்பான, சிக்கனமான, நிலைபேறான, கவர்ச்சிகரமான நிர்மாண சூழல் ஒன்று இருக்கின்றது என்பதை சான்றுப்படுத்தும் பொருட்டு கட்டிட நிர்மாண பணிகளின்போது தொழில்நுட்ப அதிகாரசபையாக இருத்தல்.

எமது பணி

அர்ப்பணிப்புடன் செயலாற்றுகின்ற, பல்வேறு துறைகளில் திறமையுள்ள, தொழில் நிபுணர்கள் குழுவினால் சேவைபெறும் தரப்பினரின் பூரண திருப்தியின்பொருட்டு தரம் தொடர்பாக தொழில்நுட்ப வகைப்பொறுப்புக்கூறல், சிக்கனம், செயற்பாடு மற்றும் மிகச்சிறந்த நிலை என்பவற்றை உறுதிப்படுத்தி கட்டிடக்கலை ரீதியான நிர்மாணம், பொறியியல் வரைபடம், நிர்மாணம், பராமரிப்பு, கருத்திட்ட முகாமைத்துவம் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதன்மூலம் அரசதுறையின் கட்டிட நடவடிக்கைகளின் அபிவிருத்திக்காக மிகச்சிறந்த சேவைகளை வழங்குதல்.

எமது பின்னணி

அப்போதிருந்த அரசின் பொதுவேலைத் திணைக்களம் ஒழிக்கப்பட்டதன் பின்னர் 1969ஆம் ஆண்டில் கட்டிட திணைக்களம் ஸ்தாபிக்கப்பட்டது. ஆரம்பத்திலிருந்தே இத்திணைக்களம் கட்டிடப் பணிகள் துறையில் அதிகாரம்கொண்ட ஒரே அதிகாரசபையாகவும் ஆலோசனை வழங்கும் நிறுவனமாகவும் மதிக்கப்பட்டது. அரசாங்கத்திலும் அரச சார்புடைய நிறுவனங்களிலும் கட்டிட நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றபோது கட்டிடப்பணிகள் தொடர்பான சிறப்பறிஞர்களின் ஆலோசனைகளை வழங்கும்படி இத்திணைக்களத்திடம் கேட்கப்பட்டது. இத்திணைக்களத்தின் பணிகள் அரசாங்கத்தின் நிதிப் பிரமாணங்களிலும் பல்வேறு திறைசேரி சுற்றறிக்கைகளிலும் விரிவாகக் காட்டப்பட்டிருந்தன. எவ்வாறாயினும், காலப்போக்கில் இப்பணிகள் பல்வேறு தோற்றங்களை எடுத்ததோடு, சேவை பெறும் நிறுவனங்களின் தேவைகளுக்கு, கட்டிட கைத்தொழிலின் மாற்றங்களுக்கு மற்றும் காலத்துக்குக் காலம் அறிமுகப்படுத்துகிற அரச கொள்கைகளுக்கு இணங்கியொழுகுகக்கூடியவகையிலும் மாற்றப்பட்டன. தேசிய அபிவிருத்தியின்போதும் அரச கட்டிட சொத்துக்களைப் பாதுகாக்கின்றபோதும் இத்திணைக்களம் ஆற்றிய சேவைகள் பாராட்டத்தக்கதாகும். நாடளாவியரீதியில் விரிவாக்கப்பட்டுள்ள கண்கானிப்பு பொறியியல் அலுவலகங்கள்மூலம் இணைப்பாக்கம் செய்யப்பட்ட 27 மாவட்ட பொறியியல் அலுவலகங்கள் இத்திணைக்களத்தின் பணிகளை நடைமுறைப்படுத்தின. அதற்கு மேலதிகமாக, கொழும்பிலும் காலியிலும் அமைக்கப்பட்டிருந்த மூன்று பிரதான நிர்மாண அலுவலகங்கள்மூலம் பாரிய நிர்மாண பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கட்டிடக் கலை, கட்டமைப்பு, மின்சாரம், நீர்வழங்கல், கழிவகற்றல் திட்டங்கள் மற்றும் தீர்க்கமான தொகைப்பத்திரங்களைத் தயாரித்தல் என்பவை மையப்படுத்தப்பட்டு அமைக்கப்பட்டிருந்த குறித்த விசேட பிரிவுகள்மூலம் நெறிப்படுத்தப்பட்டன. திணைக்களத்தில் மொத்த நிரந்தரப் பணியாளர்கள் 5000க்கு மேல் இருந்தனர்.

அரசியலமைப்பில் 13வது திருத்தச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து, மாகாணசபைகளுக்கு அதிகாரங்களை வழங்கி, அத்திருத்தத்தின் 9வது அட்டவணையில் IIஆம் பட்டியலிலும் IIIஆம் பட்டியலிலும் குறிப்பிடப்பட்டுள்ள தேசிய கருத்திட்டங்களைச் செயற்படுத்தும்பொருட்டு திணைக்களத்தின் ஊழியர்களுடைய எண்ணிக்கையைக் குறைத்தும் அதன் பிரதான பொறியியல் அலுவலக வலையமைப்பை கொழும்பு, கண்டி, காலி, குருணாகல், யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள 07 அலுவலகங்கள் வரை குறைத்தும் திணைக்களம் மீள கட்டமைக்கப்பட்டது. அதன் பிரகாரம் தலைமை அலுவலகத்தின் பணியாட்தொகுதி 69 பொறியியலாளர்களையும், 85 தொழில்நுட்ப உத்தியோகத்தர்களையும் 52 திட்டமிடுகின்றவர்களையும் ஏனைய ஊழியர்களையும் உள்ளடக்கி 621 பேரைக் கொண்டுள்ளது.

அரசாங்கத்தின் திறந்த பொருளாதார கொள்கையின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள தற்போதைய தேவைகளின் பிரகாரம் கட்டிடத் திணைக்களத்தின் பணிகளை மீள தயாரிப்பதற்காக திணைக்களம் தொடர்பாக ஆழமாக ஆராய வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

இத்தேவைகளை யதார்த்தமாக்கிக்கொண்டதன் பெறுபேறாக இந்த ஒன்றிணைந்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

Last Updated on Monday, 18 November 2013 05:00  
காப்புரிமை © 2018 கட்டிடத் திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.
அபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations (Pvt) Ltd.